News October 24, 2024

கோபி அரசு ஐடிஐயில் புதிய தொழில் பிரிவில் சேர கால நீட்டிப்பு

image

கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவில் சேர அக்.30ம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெக்கானிக் எலக்ட்ரிக் வீக்கில்ஸ், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் என 2 புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 70108-75256 எண்ணில் தொடர்புகொள்ளவும்.

Similar News

News October 18, 2025

ஈரோடு: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய நபர்கள்: போலீஸ் அதிரடி

image

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சாலையில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த கருங்கல்பாளையம் கள்ளுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பவித்ரன் (32), அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் 54 ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News October 17, 2025

ஈரோடு இரவு ரோந்து காவல் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!