News March 18, 2024
தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.
Similar News
News February 14, 2026
தேனி: வயலுக்குள் புகுந்த அரசு பஸ்; பயணிகள் அதிர்ச்சி

சின்னமனூர் நெடுஞ்சாலையில், துர்க்கை அம்மன் கோயில் அருகே தேனி – கம்பம் நகர் நோக்கி வந்த அரசு பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சிறு காயங்கள் மட்டும் ஏற்பட்டது. விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News February 14, 2026
தேனியில் பிப்.17 மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

தேனி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், வரும் 17ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் நுகர்வோர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே தேனி, போடி, ராசிங்காபுரம் உட்கோட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து அடிக்கடி CALL வருதா?

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <


