News October 24, 2024

அஜீரணப் பிரச்னையை விரட்டி அடிக்கும் கடுக்காய் தேநீர்

image

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு, புளி ஏப்பம் போன்ற செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற கடுக்காய் தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கடுக்காய், சுக்கு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை பொடித்து நீரில் கலந்து, கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான கடுக்காய் தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

Similar News

News November 1, 2025

‘பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹25 லட்சம்’

image

தலைப்பை பார்த்ததும் ஆச்சரியமாகவும் சற்று சபலமாகவும் இருக்கிறதல்லவா? ஆன்லைனில் வந்த இந்த செய்தியால் பணம் கிடைக்கவில்லை. மாறாக ₹11 லட்சத்தை பறிகொடுத்திருக்கிறார் புனேவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர். இந்த மோசடி தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில், போலீஸ் விசாரித்து வருகின்றனர். 2022 முதல் இத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. உஷார்!

News November 1, 2025

இந்தியா ஏ அணி வெல்லுமா?

image

IND A உடனான பயிற்சி ஆட்டத்தில் SA A அணி, முதல் இன்னிங்ஸில் 309/10, 2-ம் இன்னிங்ஸில் 199/10 ரன்களை எடுத்தது. IND A முதல் இன்னிங்ஸில் 234/10 ரன்களை எடுத்தது. இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தில் 119/4 ரன்களை எடுத்துள்ள நிலையில், இன்னும் 156 ரன்கள் தேவைப்படுகின்றன. கேப்டன் பண்ட் 64* ரன்களுடன் களத்தில் உள்ளார். நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 1, 2025

எந்த நாட்டில் அதிக யானைகள் உள்ளன தெரியுமா?

image

யானை ஒரு அழகான, மென்மையான, புத்திசாலிதனமான உயிரினம். அதன் பெரிய உடலும் நீண்ட தும்பிக்கையும் வலிமையை காட்டினாலும், குழந்தை மனம் கொண்டது. யானைகள் காடுகளில் பசுமையை காப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன. இயற்கையின் நண்பனான யானைகள், எந்த நாட்டில் அதிகமாக உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!