News October 24, 2024
மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள் – ஆட்சியர்

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. இதனால் எழும் அதிகப்படியான ஒலி & காற்றால் சிறுவர்கள், பெரியவர்கள் பாதிக்கப்படுவர் என தேனி ஆட்சியர் தெரிவித்தார்..
Similar News
News January 29, 2026
தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை – OPS

பெரியகுளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தொண்டர்களின் ஆதரவை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டோம். தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ, தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ இதுவரை முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், அதிமுகவை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
News January 29, 2026
BREAKING: ஓபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் திடீர் சலசலப்பு

பெரியகுளம் பண்ணை வீட்டில் வைத்து இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நிர்வாகிகள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனக் கூறியதால் ஆதரவாளர்களுக்கு இடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், தேர்தல் நிலைப்பாடு குறித்து துண்டு சீட்டில் எழுதி தருமாறு நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தல்.
News January 29, 2026
தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <


