News October 24, 2024
யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது: நிர்மலா

உலக வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “இன்று உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இதை பயன்படுத்தி யார் மீதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தாது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பொருளாதார சக்தியாகவும் இந்தியா இருக்கிறது. எனவே, அமெரிக்காவோ, சீனாவோ யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என பெருமிதத்துடன் பேசினார்.
Similar News
News August 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
News August 16, 2025
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.
News August 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 16 – ஆடி 31 ▶ கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.