News October 24, 2024
விரைவில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டம்

பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26ஆம் தேதி தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.
Similar News
News December 27, 2025
தற்கொலைக்கு முயன்ற பெண் தூய்மை பணியாளர்

சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் முழுவதும், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் தூய்மை பணியாளர் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் கீழ் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு, காரின் டைரில் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு கீழே விழுந்தால் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
News December 27, 2025
சென்னை: சிசிடிவி டெண்டருக்கு தடை மறுப்பு

சென்னை காவல்துறையின் சிசிடிவி கேமரா பொருத்தும் டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. டெண்டரில் குறைபாடுகள் உள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பில் அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் தடை இன்றி விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளது.
News December 27, 2025
சென்னை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


