News October 24, 2024
ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (49) கடந்த 2020-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் கணவர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. அப்போது இருசக்கர வாகன உரிமையாளரும் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News November 1, 2025
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.81 லட்சம் வருவாய்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 73 நாட்களில் பக்தர்களிடமிருந்து ரூ.81,71,715 வருவாய் வசூலாகியுள்ளது. 89 கிலோ தங்கம், 5 கிலோ 903 கிராம் வெள்ளி போன்ற நன்கொடைகளும் கிடைத்துள்ளன. இந்த வருவாய், கோவில் பராமரிப்பு மற்றும் தேவாலய பணிகளுக்காக பயன்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 1, 2025
திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு தடை

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (நவ.2 ந்தேதி), மாலை தொலைத்தொடர்புக்கான LVM3-M5 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எனவே பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 1, 2025
திருவள்ளூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


