News October 24, 2024

வேப்பூரில் சிறுவனை தாக்கிய இளம்பெண் கைது

image

வேப்பூர் அடுத்த மாளிகைமேட்டை சேர்ந்தவர் செல்வம் மகன் அஸ்வின் (14). செல்வம் குடும்பத்துக்கும், பக்கத்தில் வசிக்கும் வெங்கடேசன் மனைவி பிரியா(23) குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது. இந்த விரோதம் காரணமாக பிரியா, அஸ்வினை உருட்டுகட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஸ்வின், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிந்து பிரியாவை கைது செய்தனர்.

Similar News

News January 16, 2026

கடலூர்: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <>www.cybercrime.gov.in <<>>என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். மறக்காமல் இதை SHARE செய்யவும்!

News January 16, 2026

கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News January 16, 2026

கடலூர்: கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

ரெட்டிச்சாவடி எஸ்.ஐ எழிலரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடை பைபாஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது ரோஹித் (18), சக்திவேல் (18), மனோஜ் குமார் (23) ஆகியோர் கஞ்சா விற்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!