News March 18, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 45பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்;1800 425 7017 மற்றும் 9363754335 என்ற whatsapp குறுந்தகவல் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 10, 2025

தருமபுரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

தருமபுரி: ரயில்வேயில் சூப்பர் வேலை; கைநிறைய சம்பளம்

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

தர்மபுரியில் இறைச்சி, மீன் விலை நிலவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இன்று (10.08.2025) நிலவரப்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ.200, நாட்டுக்கோழி கிலோ ரூ.400, ஆட்டுக்கறி கிலோ ரூ.700 என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், ரோகு மீன் கிலோ ரூ.200, கட்லா மீன் கிலோ ரூ.220, பாறை மீன் கிலோ ரூ.240, விவசாய மீன் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது.

error: Content is protected !!