News October 24, 2024

நீலகிரி: சாலை அமைக்க இடம் வழங்கிய பொதுமக்கள்

image

நீலகிரி: தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3ஆம் வார்டு மற்றும் 10ஆம் வார்டுக்குட்பட்ட பகுதிகளில், புதிதாக சாலை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சாலை அப்பகுதி மக்களின் பட்டா நிலங்களின் வழியாக செல்ல உள்ளதால், அப்பகுதி மக்கள் சாலை அமைப்பதற்காக தங்களது நிலத்தினை வழங்கினார்கள். அதற்கான ஆவணங்களை வார்டு உறுப்பினர்கள் எமி போல், ரம்சீனா ஆகியோர் தலைவர் வள்ளியிடம் வழங்கினார்கள்.

Similar News

News January 13, 2026

BREAKING: கூடலூர் வந்தார் ராகுல் காந்தி!

image

நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று வருகை தந்துள்ளார். அவருக்கு, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், உற்சாக வரவேற்பு அளித்தனர். கூடலூரில் தனியார் பள்ளியில் நடைபெறும் விழாவில், ராகுல் காந்தி கலந்துகொண்டு, மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

News January 13, 2026

கூடலூர் பெண்ணுக்கு ஜனாதிபதி அழைப்பு

image

கூடலூர் பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்டக் கூலி தொழிலாளி இந்திராணிக்கு (56), டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதியிடமிருந்து நேரடி அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், சாதாரணக் கூலித் தொழிலாளியான எனக்கு கிடைத்துள்ள இந்த அழைப்பு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.

News January 13, 2026

நீலகிரி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

error: Content is protected !!