News October 24, 2024
மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பிங்க

மத்திய அரசின் GRSEL நிறுவனத்தில் 236 காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. Trade அப்ரன்டிஸ், Graduate அப்ரன்டிஸ், Technician அப்ரன்டிஸ், HR Trainee ஆகிய பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வேலை, தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவலை www.grse.in இணையதளத்தில் காணலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். SHARE IT
Similar News
News August 14, 2025
ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்க கோரிக்கை

2023-ம் ஆண்டு லண்டனில் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனை எதிர்த்து சாவர்க்கரின் பேரன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். புனே நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ராகுல் வழக்கறிஞர் தரப்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சாவர்க்கர், கோட்சே ஆதரவாளர்களால் ராகுல் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
கூலி ரஜினி கிரீடத்தின் வைரம்: SK

திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிக்கு SK வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தங்களைப் பார்த்து, தங்களைப் போல மிமிக்ரி செய்து, தற்போது தங்களது துறையிலேயே தானும் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் என்றும், தங்களது கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக கூலி ஜொலிக்கும் என தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: அறிவுடைமை
குறள் எண்: 427
குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.