News October 24, 2024
தினம் ஒரு திருக்குறள் (2)

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.
Similar News
News October 25, 2025
கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதி

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, மத்திய அரசு தரப்பில் ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் வங்கி கணக்கில் ₹2 லட்சத்தை மத்திய அரசு செலுத்தியுள்ளது. ஏற்கெனவே TN அரசு ₹10 லட்சமும், விஜய் ₹20 லட்சமும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News October 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 25, ஐப்பசி 8 ▶கிழமை:சனி ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்:1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News October 25, 2025
₹4000 கோடி நிதியை வீணடித்த திமுக: H.ராஜா

தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மாநிலத்தின் வளர்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக H.ராஜா விமர்சித்துள்ளார். விவசாயிகள் நெல்லை பாதுகாக்க நிரந்தரக் கிடக்கு கூட திமுக அரசு 4 ஆண்டுகளில் அமைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு கொடுத்த ₹4,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை அரசு சரியாக பயன்படுத்தவில்லை எனவும் சாடியுள்ளார்.


