News October 24, 2024
BREAKING: தீவிர புயலாக வலுப்பெற்றது “டானா”

“டானா” புயல், தீவிர புயலாக வலுப்பெற்றது. அந்தப் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 280 கி.மீ., மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 370 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் தீவையாெட்டி கரையை கடக்கும் என்றும் கணித்துள்ளது.
Similar News
News January 27, 2026
FLASH: இன்று விடுமுறை!

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் சங்கம்(AIBEA) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் AIBEA வேண்டுகோள் விடுத்துள்ளது. LIC-ல் 100% அந்நிய முதலீடு, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
News January 27, 2026
தென் கொரியாவுக்கு டிரம்ப் வைத்த செக்!

தென் கொரிய இறக்குமதிகளுக்கான வரிகளை 25% ஆக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்தாண்டு எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை சியோல் நிறைவேற்றத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒப்பந்தத்தின்படி வரிகளை குறைக்க நாங்கள் விரைவாக செயல்பட்டோம் என்றும், ஆனால் தென் கொரிய பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டி வருகின்றனர் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
SPORTS 360: கம்பீருக்கு ரஹானே முக்கிய அறிவுரை!

*டி20 WC முடியும் வரை SM-ல் இருந்து விலகி இருக்குமாறு கம்பீருக்கு Ex வீரர் ரஹானே கோரியுள்ளார். *டி20 WC-ல் ஸ்காட்லாந்தின் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. *ஹீரோ ஹாக்கி இந்தியா லீக்கில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. *டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் 8-வது சுற்றில் உலக சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். *ஆஸி., ஓபனில் சின்னர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.


