News October 24, 2024
விக்ரவாண்டியில் தவெக பிரமாண்டமான கட்-அவுட்கள்

விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான மாநாட்டு திடல் பகுதியில் பணிகள் மும்முரமாக இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இங்கு காமராஜர், பெரியார், விஜய், அம்பேத்கர் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட உருவ கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 21, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த <
News August 21, 2025
விழுப்புரம்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
தரமான நெல் விதைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

விழுப்புரத்தில் சம்பா பருவத்திற்கு தரமான சான்று பெற்ற நெல் விதைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார். எனவே அனைத்து தனியார் மொத்த சில்லறை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கவும், அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.