News October 24, 2024

பிரிக்ஸ் அமைப்பில் PAK இணைய இந்தியா எதிர்ப்பு

image

பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடாக பாகிஸ்தான் இணைய இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது நடைபெறும் மாநாட்டில் பாக். பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படாத நிலையில், இந்தியா எதிர்ப்பு காரணமாக பிரிக்ஸ் அமைப்பில் அந்நாடு இணைவதில் சிக்கல் நிலவுகிறது. துருக்கி மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேர விண்ணப்பித்துள்ள நிலையில், அவை அனைத்தும் பரிசீலனையில் உள்ளது.

Similar News

News February 3, 2026

காலையில் கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க!

image

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலையை ஜூஸ் போட்டு காலையில் குடித்தால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். * நீண்ட நேரம் பசி எடுக்காமல் உணர வைத்து எடை இழப்புக்கு உதவும் *உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படும் *செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு *ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த உதவும் *உடலில் ஹீமோகுளோபின் அதிகரிப்பு *தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்

News February 3, 2026

பிப்ரவரி 3: வரலாற்றில் இன்று

image

*1900 – வேதியியலாளர் டி.ஆர்.சேஷாத்ரி பிறந்தநாள் *1900 – தமிழ்ப் புலவர் எ.ஆ.கிருட்டிணப் பிள்ளை நினைவு நாள் *1963 – பொருளியல் அறிஞர் ரகுராம் ராஜன் பிறந்தநாள் *1969 – மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் *1983 – நடிகர் சிலம்பரசன் பிறந்தநாள் *1998 – இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொலை

News February 3, 2026

தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

image

நள்ளிரவு முதல் பயண உடைமைக்களுக்கான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வெளிநாட்டில் ஓராண்டுக்கு மேல் தங்கியிருந்து வசித்துவிட்டு வான்வழியாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ இந்தியா திரும்பும் பெண்கள் 40 கிராமும், ஆண்கள் 20 கிராமும் ஆபரண தங்கத்தை சுங்க வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்படுவர். அதேபோல, ₹75,000 வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி கிடையாது.

error: Content is protected !!