News October 24, 2024
இர்ஃபான் விவகாரம்: மருத்துவமனைக்கு 10 நாள் தடை

விதிமுறைகளை மீறியதற்காக தனியார் மருத்துவமனை செயல்பட 10 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்துள்ளது. இதனை வீடியோவாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மருத்துவமனைக்கு 10 நாள் தடையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
Similar News
News July 7, 2025
விஜய் சேதுபதியின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News July 7, 2025
விவசாயிகளுக்கு இபிஸ் தந்த வாக்குறுதிகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், அத்திக்கடவு – அவிநாசி திட்டமும் விரிவுப்படுத்தப்படும் என்றார். அதிமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மும்முனை மின்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News July 7, 2025
PF பண இருப்பை ஈசியாக அறியலாம்..!

உங்கள் PF இருப்பை SMS மூலம் சரிபார்க்க, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN TAM” என்ற வடிவத்தில் ஒரு செய்தியை அனுப்பவும். UAN என்ற இடத்தில் உங்களுக்கான யுனிவர்சல் கணக்கு எண்ணை பதிவிட வேண்டும். TAM என்பது தமிழ்நாட்டை குறிக்கும். Try பண்ணி பாருங்க மக்களே..