News October 24, 2024
பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு தெரியுமா?

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவருடைய மொத்த சொத்து மதிப்பு ₹12 கோடி என குறிப்பிட்டுள்ளார். 2023-24ஆம் ஆண்டின் வருமானம் ₹46.39 லட்சம் எனவும், அசையும் சொத்து ₹4.24 கோடி, அசையா சொத்து ₹7.74 கோடி, 4,400 கிராம் தங்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ₹15 லட்சம் கடன் இருப்பதையும், தன் மீது 2 FIR பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 29, 2025
BREAKING: விஜய் கட்சியை முடக்க முயற்சி

கரூருக்கு விஜய் தாமதமாக செல்ல காவல்துறையே காரணம் என தவெகவின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். போக்குவரத்தை போலீசார் சரியாக சீர் செய்து கொடுத்திருந்தால், விஜய் சரியான நேரத்தில் கரூர் சென்றிருப்பார் எனவும் கூறியுள்ளார். அதேபோல், தவெகவை முடக்க முயற்சி நடப்பதாகவும், எந்த வித நெருக்கடியையும் எதிர்கொள்ள தவெக தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
இந்தியாவின் கைப்பாவையாக ஆப்கன் உள்ளது: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் , இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான், இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் துண்டுதலின் பேரில், ஆப்கானிஸ்தான் செயல்படுவதாகவும், பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஆப்கானால் தாங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.
News October 29, 2025
படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

உயர்கல்வி படிக்க நிதி இல்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


