News October 24, 2024
கொல்கத்தாவில் விமான சேவைகள் நாளை மாலை ரத்து

கொல்கத்தாவில் நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள “டானா” புயல் நாளை காலை தீவிர புயலாக வலுவடைந்து நாளை இரவு முதல் நாளை மறுநாள் காலை வரை ஓடிசா- மேற்குவங்கம் இடையே கரையை கடக்கவுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கையாக கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Similar News
News February 9, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ₹15,000 மாறியது

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று (பிப்.9) உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹15 உயர்ந்து ₹300-க்கும், 1 கிலோ வெள்ளி ₹15,000 உயர்ந்து ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஒரேநாளில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது, இன்று நகை வாங்க நினைத்தோருக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதேநேரம் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News February 9, 2026
பிராக்டிக்கல் Exam தொடங்கியது.. அமைச்சர் ஆய்வு

+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு(Practical) இன்று தொடங்கியது. இந்த ஆண்டு 7,99,892 மாணவ, மாணவிகள், 26,441 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.26 லட்சம் பேர் எழுதுகின்றனர். இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வுகளை எழுதி ஆய்வகங்களில் மாதிரியை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
News February 9, 2026
செல்வப்பெருந்தகைக்கு எதிராக பொங்கிய விசிக!

கூட்டணி நிலைப்பாட்டை VCK மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரிகமற்ற அணுகுமுறை என செல்வப்பெருந்தகைக்கு MLA பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று தனியார் TV நேர்காணலில் பேசிய செல்வப்பெருந்தகை, கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ், திருமாவளவன் இருவரும் அமர்ந்து பேச வேண்டும் எனவும், திமுக தலைமையே கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறியிருந்தார். இது விசிகவினரை அப்செட் ஆக்கியுள்ளது.


