News March 18, 2024

ஐ.பெரியசாமி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு

image

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2006-11ல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.

Similar News

News October 25, 2025

காயம் ஏற்பட்டால் இதை செய்யக்கூடாது!

image

பொதுவாக தீ உள்பட எந்த காயமாக இருந்தாலும் முதலில் பலர் தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்வது வழக்கம். ஆனால் அது தவறான வழிமுறையாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் காயத்தை ஆற்றாமல், அதன் ஹீலிங் பண்பை தடுத்து நிறுத்தி விடுமாம். எனவே காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் அதை கழுவி, அந்த இடத்தில் ஆன்ட்டி செப்டிக் கிரீம்கள் அப்ளை செய்வது போதுமானதாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT

News October 25, 2025

PHOTOS: அஜித் நெஞ்சில் கடவுள் டாட்டூ

image

கார் ரேஸில் தீவிரமாக உள்ள அஜித் இப்போது இந்தியா திரும்பியுள்ளார். விரையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனிடையே கேரளா பாலக்காட்டில் உள்ள கோவிலுக்கு அஜித் சென்ற போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. முக்கியமாக அதில் அஜித் நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ கவனம் பெற்றுள்ளது. தனது குல தெய்வமான பகவதி அம்மனை டாட்டூவாக அஜித் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

News October 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 499 ▶குறள்: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. ▶பொருள்:பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

error: Content is protected !!