News October 23, 2024
படங்களில் நடிப்பதை குறைக்கும் அஜித்?

15 ஆண்டுகளுக்கு பின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்குமார், அதற்காக பயிற்சி மேற்கொண்ட வீடியோக்கள், படங்கள் வைரலானது. இது அவர் சினிமாவில் இருந்து விலகக்கூடும் என்ற ஊகத்தை கிளப்பியது. இந்நிலையில், ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும், அதனால் படங்களின் எண்ணிக்கையை குறைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Similar News
News July 8, 2025
நாளைய முதல்வர் இபிஎஸ்… மேடையில் பேசிய நயினார்!

கூட்டணி ஆட்சியா? தனிப்பெரும்பான்மை ஆட்சியா? என்ற கோணத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் குழப்பம் இருந்தது. கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இபிஎஸ், பாஜக தலைவர்கள் முன்னிலையிலேயே அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனக் கூறினார். இதனை வரவேற்கும் விதமாக, நாளைய முதல்வர் இபிஎஸ் என நயினார் நாகேந்திரனும் பேசி இருக்கிறார். திடீர் திருப்பமாக பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வந்திருக்கிறது.
News July 8, 2025
U19 ODI: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான U19 ODI போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியாவில், அம்பிரீஷ்(66) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் 210 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தில், பென் மேயஸ் 82 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆனால் தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றியது.
News July 8, 2025
கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமா?

இதே வேகத்தில் போனால், 2050-க்குள் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆம், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 85 சதவீதம், நிலம் (அ) கடலில் எறியப்படுகிறது. இவை கடலையும், காற்றையும் மாசுப்படுத்துகின்றன. மேலும், மீன்களின் உடலிலும் சேர்வதால், அவற்றை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கலாமே!