News October 23, 2024
90s கிட்ஸ் உஷார்! ஆண்களுக்கு இதுதான் சரியான வயது!

குழந்தையின்மை பிரச்சனை அதிகரிக்க, ஆண்கள் லேட் மேரேஜ் செய்வதும் காரணம் என்கிறது ஆய்வு. வயது அதிகரிக்க உடல்செயல்பாடும், விந்தணுக்களின் தரமும் குறைவதே இதற்கு காரணம். ஆண்களின் குழந்தை பெறும் திறன் 22-25 வயதில் உச்சத்திலும், 35 வயதுவரை சிறப்பாகவும் இருக்கும். ஆனால், 40-45 வயதுக்கு மேல் விந்தணு தரம் குறைவதால் கருச்சிதைவு, சிசு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, ரொம்ப லேட் பண்ணாதீங்க மக்களே!
Similar News
News January 28, 2026
தைப்பூசம் விடுமுறை.. வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஜன.30, 31, பிப்.1-ல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. <
News January 28, 2026
சில பூச்சிகள் ரீங்காரம் இடுவது ஏன்?

தேனீ, சில வண்டுகளின் இறக்கைகள் நொடிக்கு சுமார் 150-250 தடவை சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது. இதுவே ஒரு வண்ணத்து பூச்சியாக இருந்தால் எதுவும் கேட்காது. அதன் சிறகுகள் நொடிக்கு 6-10 தடவை மட்டுமே சிறகடிக்கின்றன. இதே கொசுக்கள் என்றால், அவை நொடிக்கு சுமார் 400-800 முறை சிறகடிப்பதால் காதின் அருகில் வந்தால் மட்டுமே ’கொய்ங்’ என்ற சப்தம் கேட்கிறது.
News January 28, 2026
விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

தேர்தலையொட்டிய கட்சித் தாவல் நிகழ்வுகளால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், அதிமுகவின் அரியலூர் முகமாக இருந்த கவிதா G.ராஜேந்திரன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக அரியலூர் மாவட்டச் செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.


