News October 23, 2024
காற்றுமாசு அதிகரித்தால் என்ன ஆகும்?

<<14435687>>உலகம் முழுவதும்<<>> ஏற்படும் மரணங்களில் 9-ல் ஒரு இறப்புக்கும், 7 கோடி premature மரணங்களுக்கும் காற்றுமாசு காரணமாக உள்ளது. காற்றில் மாசு அதிகரிக்கும் போது ஆஸ்துமா, புற்றுநோய், ஸ்ட்ரோக், நுரையீரல் பாதிப்புகள் உள்பட பல்வேறு நோய்கள் அதிகரிக்கிறது. மேலும், மனநிலை பாதிப்பு ஏற்படவும், நீரிழிவு அதிகரிக்கவும் காரணமாகிறது. குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பதாகவும் கூட ஆய்வுகள் தெரிவிக்கிறது.
Similar News
News July 7, 2025
பதவி நீக்கம்.. சில மணி நேரத்தில் அமைச்சர் தற்கொலை

ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News July 7, 2025
விஜய் சேதுபதியின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News July 7, 2025
விவசாயிகளுக்கு இபிஸ் தந்த வாக்குறுதிகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், அத்திக்கடவு – அவிநாசி திட்டமும் விரிவுப்படுத்தப்படும் என்றார். அதிமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மும்முனை மின்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.