News October 23, 2024
தீபாவளி: ₹499க்கு தமிழக அரசு கொடுக்கும் பொருட்கள் லிஸ்ட்

தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ₹499க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அரசு நேற்று அறிமுகம் செய்தது. *மஞ்சள் தூள் – 50g, * கடுகு – உளுத்தம்பருப்பு – 125g, சீரகம் 100g, வெந்தயம் 100g, சோம்பு 50g, மிளகாய் 250g, தனியா 500g, புளி 500g, உளுத்தம் பருப்பு 500g, கடலை பருப்பு 200g, பாசிப்பருப்பு 200g, வறுகடலை 200g, பெருங்காயத்தூள் 15g ஆகியவை அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் விற்கப்படுகிறது.
Similar News
News February 25, 2026
7 நாள்களில் முகம் பளபளப்பாக இது போதும்!

யாருக்குத்தான் முகம் பளபளப்பாக மாறவேண்டும் என்ற ஆசை இருக்காது? உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் 7 நாள்கள் தொடர்ந்து இந்த Skin care-ஐ செய்து பாருங்கள். தேவையான அளவு தயிரை எடுத்து தினமும் 15 நிமிடங்கள் முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள். அதேபோல, கற்றாழை ஜெல்லையும் நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். இதை 7 நாள்களுக்கு செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் தெரியுமாம். SHARE.
News February 25, 2026
கோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை: EPS

வரும் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இருக்குமா இருக்காதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துவிட்டதாக EPS தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி ஒருமித்த கருத்துடன் வலிமையாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சியமைப்பதை ஸ்டாலின் வேடிக்கை பார்க்க போவதாகவும் கூறியுள்ளார். ஊழல் வழக்கில் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், அமைச்சர் நேரு மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News February 25, 2026
கலப்பட பால் குடித்து 6 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே கலப்பட பாலை விநியோகித்த வரலட்சுமி டெய்ரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பாலை பதப்படுத்தும் அறையில் Ethylene glycol கசிந்ததால், அது விஷயமாக மாறியது என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதையடுத்து, உரிய அனுமதியின்றி இயங்கிய வரலட்சுமி டெய்ரி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


