News October 23, 2024

‘தளபதி 69’ கதை இதுதானாம்..!

image

‘தளபதி 69’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பிரச்னை காரணமாக காவல்துறையில் இருந்து வெளியேறும் விஜய், முக்கிய கேஸ் காரணமாக மீண்டும் போலீஸில் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் கதை பிண்ணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் போது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Similar News

News December 1, 2025

தோட்டக்கலைத் துறையில் திமுக ஊழல்

image

தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹136 கோடியில் முறைகேடு நடந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பான செய்திகள் வெளிவந்தும் இன்னும் ஏன் CM ஸ்டாலின் பதிலளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கம்போல் வெள்ளை பேப்பரை தூக்கிகாட்டி உருட்டாமல், செலவினங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.

News December 1, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக சென்னையில் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. உடனடி தகவலுக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

News December 1, 2025

வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் நன்மைகள்

image

மழை மற்றும் குளிர் காலங்களில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். இது தினசரி ஆரோக்கிய பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!