News October 23, 2024
ரஷ்யாவுக்கு 3000 வீரர்களை அனுப்பிய வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவ 3,000 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக SK நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது, டிசம்பருக்குள் 10,000 வீரர்களை அனுப்ப ரஷ்யாவுடன் NK ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், சூழலுக்கு ஏற்ப அவர்கள் களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே SKவின் குற்றச்சாட்டுகள் போலி என ரஷ்யா மறுத்துள்ளது.
Similar News
News January 19, 2026
புதுவை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
News January 19, 2026
அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது: அன்பில் மகேஸ்

2003-ல் ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்த அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை மேற்கோள்காட்டிய அவர், 5 ஆண்டுகளாக அதை செய்யாமல், திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன் என்றார். மேலும், இது தேர்தல் நாடகம்தான் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 19, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை இன்று(ஜன.19) சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹170 உயர்ந்து ₹13,450-க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹1,07,600-க்கும் விற்பனையாகிறது. <<18893945>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதே இந்திய சந்தையில் உயரக் காரணம் எனவும், இது அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


