News October 23, 2024
இந்தியா – சீனா தீர்மானம் குறித்து காங். கேள்வி

எல்லைப் பிரச்னையில் இந்தியா- சீனா இடையே தீர்மானம் ஏற்பட்டுள்ள விவகாரத்தில், காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். எல்லையில் 65 ரோந்து புள்ளிகளில் 26 இடங்களை இந்தியா இழந்த நிலையில், இப்போது அது ஒப்பந்தமாகிவிட்டதா எனவும், சீனத் தரப்பில் குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் எழுத்துப்பூர்வமானதா அல்லது வாய்மொழியானதா என்று அவர் அரசிடம் வினவியுள்ளார்.
Similar News
News January 14, 2026
பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தெரியுமா?

கிறிஸ்துமஸின் மறுநாள், AUS-ல் நடக்கும் பாக்ஸிங்டே டெஸ்ட் போலவே, பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் 1960-ல் முதல் 1988 வரை இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணிக்கு எதிராக 1960-ல் AUS, 1961-ல் PAK, 1962-ல் ENG, 1988-ல் WI ஆகிய அணிகள் பொங்கல் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளன. அப்போது, கொண்டாட்ட மனநிலை ஒட்டுமொத்த அரங்கையும் ஆக்கிரமித்திருந்ததாக கூறுகிறார்கள். மறுபடியும் நடக்குமா?
News January 14, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹880 உயர்வு

தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று(ஜன.14) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹110 உயர்ந்து ₹13,280-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹880 அதிகரித்து ₹1,06,240-க்கு விற்பனையாகிறது. <<18851994>>சர்வதேச சந்தையில் காலையில்<<>> சற்று குறைந்த தங்கம் தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால் இந்திய சந்தையில் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது.
News January 14, 2026
PAK-க்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!

கடந்த சில நாள்களாக எல்லையில் பாக்., <<18851779>>ட்ரோன்<<>> அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் பாக்., ட்ரோன்களை ஏவுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சீனா, பாக்.,-க்கு போட்டியாக இந்தியா விரைவில் பிரத்யேக ‘ராக்கெட்-ஏவுகணை படை’ ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


