News October 23, 2024
தீபங்களும் ஏற்ற வேண்டிய இடங்களும்

ஒருவர் தனது வீட்டில் உள்ள இடங்களுக்கு ஏற்ப தீபமேற்றி வழிபடுவதால் ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரிக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அதன் விவரம் இதோ: *கோலமிட்ட வாசல்-5 *திண்ணை – 4 *மாடக்குழி – 2 *நிலைப்படி – 2 *வாசல்படி – 2 *முற்றம் – 4 *பூஜையறை – 2 *சமையலறை – 1 *தோட்டம் – 16 விளக்கு ஏற்றி வைத்து, ‘தீப லட்சுமியே நமோ நம’ என்ற மந்திரத்தை 24 முறை சொல்லி வணங்கினால் சர்வ மங்கலமும் உண்டாகும்.
Similar News
News January 14, 2026
12 தொகுதிகளை கேட்டு ஷாக் கொடுக்கும் ஜி.கே.வாசன்!

தனது ராஜ்யசபா MP பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மாநில அரசியலில் கவனம் ஜி.கே.வாசன் முடிவெடுத்துள்ளாராம். அதனால், NDA கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்டு EPS-க்கு ஜி.கே.வாசன் ஷாக் கொடுத்துள்ளதாக தமாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு பின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை தயார் செய்ய உள்ளதாகவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 14, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 14, மார்கழி 30 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 14, 2026
இன்று தவறவிட்டால் கோலியால் வரலாறு படைக்க முடியாது!

கடைசியாக நடந்த 5 ODI போட்டிகளிலும் கோலி 50+ ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில், இன்றையை NZ-க்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தால், தொடர்ச்சியாக 6 ODI-களில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைப்பார். தற்போது சச்சின், டிராவிட், ரோஹித், ரஹானே ஆகியோருக்கு நிகராக கோலி இருக்கிறார். இந்த பட்டியலில் 9 முறை 50+ ரன்களை அடித்து PAK வீரர் ஜாவித் மியாண்டாட் முதலிடத்தில் உள்ளார்.


