News October 23, 2024
டிசம்பரில் பாஜகவுக்கு புதிய தலைவர்?

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின்பு பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தலைவராக உள்ள ஜெ.பி. நட்டா அமைச்சரான நிலையில், டிசம்பர் 2ஆவது வாரத்திற்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தென் மாநிலத்தை சேர்ந்தவரை தலைவராக்க பாஜக மூத்த தலைவர்கள் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 24, 2026
சற்றுமுன்: போலீஸ் வாகனம் மீதே நாட்டு வெடிகுண்டு வீச்சு

பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் வெள்ளை காளியை, சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றபோது, பெரம்பலூர் திருமாந்துறை அருகே 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ரவுடி, போலீசார் பலத்த காயமடைந்துள்ளனர்.
News January 24, 2026
பள்ளிக் கட்டணங்களை கட்டுப்படுத்த புதிய கமிட்டி

TN-ல் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தும் <<18943567>>திருத்த மசோதா<<>> சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, Retd நீதிபதி தலைமையில் 7 பேர் கமிட்டி தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஆராய்ந்து உச்சவரம்பை நிர்ணயிக்கும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்கள் சீராய்வு செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் கருத்தும் கேட்கப்படும் என்பது கூடுதல் தகவல். இது அமலுக்கு வரும்தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
News January 24, 2026
விருப்ப மனு ₹50,000… அறிவித்தது மநீம!

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தில் 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மநீம சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ₹50,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் போட்டியிட விரும்பும் கோவை, தாம்பரம், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல் உள்ளிட்ட 15 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் மநீம கொடுத்துள்ளதாம்.


