News October 23, 2024

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் ரூ.5000 அபராதம்

image

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரும் மக்களை எச்சரித்து வருகின்றனர். முதல் முறையாக பிடிபட்டால், ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News

News January 28, 2026

சென்னையில் பல்­நோக்கு மருத்து­வ பணியா­ளர்­கள் போராட்டம்

image

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று பல்­நோக்கு மருத்து­வப் பணியா­ளர்­கள் கூட்­ட­மைப்பின் சார்பில் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாபெரும் காத்­திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் சங்­கர், தினேஷ் குமார் மற்­றும் நந்­தகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

News January 28, 2026

சென்னை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 28, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

error: Content is protected !!