News October 23, 2024
நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
Similar News
News December 8, 2025
முதல்வரை சந்தித்த நாமக்கல் ஆட்சியர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி சந்தித்தார். அப்போது கடந்த 18ந் தேதி அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில், இந்திய குடியரசு தலைவர் தலைமையில் நடைபெற்ற 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில் JSJB முன் முயற்சியின் கீழ் 7057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக விருது வழங்கப்பட்டது. அதனை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
News December 8, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.08) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (ராஜு – 9498114857) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 8, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-8ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் தேவை அதிகரித்தது. இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக இதே விலை நீடித்து வருகிறது.


