News March 18, 2024
மதுரை அருகே 7 பேர் மீது வழக்கு

மேலூர் அருகே கரையிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக உள்ளவர் சின்னையா. அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மது போதையில் நேற்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை சின்னையாவின் மருமகன் சிவா தட்டி கேட்க, அவரை பீர் பாட்டிலால் ரஞ்சித் தலையில் தாக்கி மண்டையை உடைத்தார். இது தொடர்பாக ரஞ்சித், சுமதி, கார்த்திகா உட்பட 7 பேர் மீது கீழவளவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 17, 2025
பல கோடி ரூபாய் சொத்துக்காக தொழிலதிபர் கடத்தல்

மதுரை, பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். மதுரையைச் சேர்ந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரராமனின் பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக, ஏப்., 14ல் சுந்தரராமன் வீட்டிற்கு சிலர் வந்து பேச்சு நடத்தினர். ஆனால், சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் வந்த காரில் அவரை கடத்திச் சென்றனர்.
News April 16, 2025
மதுரை : சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார்

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் மாரியம்மாள் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4.00 மணிக்கு திருப்பரங்குன்றம் மேல ரத வீதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
மதுரை: உள்ளூரிலேயே அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.