News October 23, 2024

தவெக மாநாட்டில் மொழிப்போர் தியாகிகள் படங்கள்

image

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாடு முகப்பில் மொழிப்போர் தியாகிகள் படங்கள் இடம்பெற உள்ளன. அக்.27இல் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மாநாடு முகப்பில் யானை சிலையும் வடிவமைக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனிடையே, மாநாட்டு முகப்பில் ஹிந்தி எதிர்ப்பு போரில் உயிரிழந்த தியாகிகள் படங்கள் இடம் பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News February 4, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 601
▶குறள்:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
▶பொருள்: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

News February 4, 2026

ஜல்ஜீவன் திட்டம்.. நிதியை நிறுத்திய மத்திய அரசு

image

ஜல்ஜீவன் திட்டத்தில் மீதமுள்ள பணிகளுக்கான நிதியை நிறுத்துவதாக ராஜ்ய சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது. 2019-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு ₹2.09 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 81.5% பணிகள் நிறைவுபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முறையாக நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, மீதமுள்ள பணிகளுக்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என கூறியுள்ளது.

News February 4, 2026

‘குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக ஆட்சிக்கு வராது’

image

தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே, தினமும் ஒரு வெற்று அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவதாக அன்புமணி சாடியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா புழக்கம், மின் கட்டண உயர்வு என திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியே என்று அன்புமணி கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றியுள்ள திமுக, இம்முறை என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஆட்சிக்கு வர முடியாது என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!