News October 23, 2024

BRICS என்றால் என்ன?

image

BRICS அமைப்பு 2009-ல் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு உருவாகும்போது, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டும் இருந்தன. பிறகு தெ.ஆப்பிரிக்கா இணைந்தது. அந்நாடுகளின் பெயரிலுள்ள முதல் எழுத்துகளை வைத்தே BRICS என அழைக்கப்பட்டது. தற்போது ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா, யுஏஇ ஆகிய நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சில நாடுகளும் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளன.

Similar News

News January 28, 2026

TET தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு

image

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நடத்தப்படும் TET தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% குறைக்கப்பட்டு 50% ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 15% குறைக்கப்பட்டு 40% ஆகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 60% தொடரும். SHARE IT.

News January 28, 2026

விசிகவுக்கு Yes ராமதாஸுக்கு NO.. ஸ்டாலின் போடும் கணக்கு

image

DMK கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையலாம் என பேசப்பட்ட நிலையில், கூட்டணிக்கு பாமக தேவையில்லை என CM ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக DMK கூட்டணியில் VCK அங்கம் வகிப்பதாலும், கொள்கை ரீதியாகவும் ஒத்துப்போவதாலும் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தும் எந்தக் கட்சியும் வேண்டாம் என கூறிவிட்டாராம். எனவே, தான் கடந்த 2 நாள்களாக DMK அரசை கடுமையாக சாடி ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறாராம்.

News January 28, 2026

‘சாகப் போகிறேன்’.. டீச்சரின் விபரீத முடிவு

image

‘அம்மா, நான் தோற்றுவிட்டேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல் இங்கேயே தகனம் செய்யுங்கள்’. பிஹாரில் அரசு பள்ளி டீச்சர் பிரியா(30) கடைசியாக எழுதிய வரிகள் இவை. நீண்டகால உடல்நல பிரச்னையால் சிகிச்சை பெற்றுவந்த அவர், மன உளைச்சலில் சோக முடிவை எடுத்துள்ளார். தனது 3 மாத குழந்தையை தவிக்கவிட்டு பிரியா தற்கொலை செய்திருப்பது பெரும் துயரம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

error: Content is protected !!