News October 23, 2024

பரங்கிப்பேட்டை அருகே லாரி மோதி விபத்து

image

சீர்காழி எலந்தூரை சேர்ந்த முகிலன் 33 என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி வினோதா நண்பர்கள் விஜயபாஸ்கர், பரத் கிஷோர் ஆகியோருடன் காரில் சென்னையிலிருந்து சீர்காழி சென்றபோது, பரங்கிப்பேட்டை அருகே பெரிய குமட்டி கிலியாளம்மன் கோயில் எதிரே இன்று காலை அதே வழியில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியதில் முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேரும் உயிர் தப்பினர்.

Similar News

News January 13, 2026

கடலூர்: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

image

கடலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 13, 2026

கடலூர்: வழிப்பறி செய்தவருக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்

image

சேராகுப்பம் பெட்ரோல் பங்கிற்கு டூவீலர்களில் பெட்ரோல் போட வந்த 4 பேர், பெட்ரோல் பங்க் மேனேஜர் மணிகண்டனிடம் (34) தகறாரில் ஈடுபட்டு, அவரிடம் இருந்த ரூ.5000 பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தமிழரசன் (29), ரமணன் (29) ஆகியோரை வடலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் ரமணன் தப்பி ஓடிய போது, கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News January 13, 2026

கடலூர்: உங்க தொகுதி எம்எல்ஏ நம்பர் இருக்கா?

image

1. திட்டக்குடி – கணேசன் (94434 45168)
2. விருத்தாசலம் – ராதாகிருஷ்ணன் (99768 08844)
3. நெய்வேலி, ராஜேந்திரன் (94432 53251)
4. பண்ருட்டி, வேல்முருகன் (87789 75909)
5. கடலூர் – ஐயப்பன் (94433 66556)
6. குறிஞ்சிப்பாடி – பன்னீர்செல்வம் (94433 71590)
7. புவனகிரி – அருண்மொழித்தேவன் (94432 08789)
8. சிதம்பரம் – பாண்டியன் (94431 51922)
9. காட்டுமன்னார்கோவில் – சிந்தனை செல்வன் (94438 76700)

error: Content is protected !!