News October 23, 2024
அஜீரணப் பிரச்னையை விரட்டி அடிக்கும் அன்னாசிப்பூ தேநீர்

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு & செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற அன்னாசிப்பூ தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்னாசிப்பூ, சுக்கு, மிளகு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அன்னாசிப்பூ தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
Similar News
News January 14, 2026
ஆசிரியர் தற்கொலை.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டார். அப்போது விஷம் அருந்தியதால் அவர் உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த அவர் இன்று உயிரிழந்ததால், தற்கொலை வழக்காக பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அரசுக்கு பின்னடைவாக மாறியுள்ளது.
News January 14, 2026
கிங் கோலி மீண்டும் நம்பர் 1

ஐசிசி ODI பேட்ஸ்மேன் தரவரிசையில், நீண்ட நாள்களுக்கு பிறகு நம்பர் 1 இடத்தை கிங் கோலி பிடித்துள்ளார். தனது கடைசி 5 ODI போட்டிகளில் 74, 135, 102, 65, 93 என மொத்தம் 469 ரன்கள் குவித்த அவர், 785 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ரோஹித் சர்மா 2 இடங்கள் சறுக்கி 775 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கேப்டன் கில் 725 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
News January 14, 2026
வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும்

தற்போது ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) ஒன்றுக்கு $94-$95 ஆக இருக்கும் வெள்ளி, இந்த மாதம் $100 ஐ எட்டக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் அடுத்த 7 நாள்களில் வெள்ளி விலை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவுகள், டிரம்பின் உத்தரவுகள், ஈரான் பதட்டங்கள் உள்ளிட்ட காரணிகளால் வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


