News October 23, 2024
அரியலூர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட எஸ்பி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.மனு கொடுக்க வந்த 14 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: பாஜக சார்பில் வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம்

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று உடையார்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
News November 8, 2025
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
அரியலூர்: இரண்டாம் நிலை தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான, பொதுத்தேர்வு வரும் (09.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.


