News October 23, 2024

புதுவை கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி “போனஸ்”

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, புதுச்சேரியில் கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5,000, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். கான்பெட் மூலமாக தீபாவளி சிறப்பங்காடியில் முந்திரி, திராட்சை, வெல்லம் உள்ளிட்ட ரூ.1,000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500-க்கு மானிய விலையில் வழங்கப்படும்.

Similar News

News January 13, 2026

புதுவை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு எண்கள்

image

புதுவை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு உதவி எண்கள். குடிமக்கள் குறை தீர் மையம் -1077, குழந்தைகள் உதவி எண் -1098, பெண்கள் உதவி எண் – 1091, குற்றங்களை தடுப்பவர் – 1090, மீட்பு மற்றும் நிவாரண ஆணையர் -1070, சாலை விபத்து – 1073, அவசர ஊர்தி – 102,108, தீயணைப்பு – 101, காவல் கட்டுப்பாட்டு அறை – 100. இந்த எண்களை SHARE செய்து பிறருக்கும் தெரியபடுத்தவும்.

News January 13, 2026

தேசிய டேக்வாண்டோ போட்டி – புதுச்சேரி அணி பங்கேர்ப்பு

image

டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ போட்டிகள் இன்றிலிருந்து 3 நாட்கள் புதுதில்லியில் நடைபெறுகிறது. புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தலைமைப் பயிற்சியாளர் பகவத்சிங், பயிற்சியாளர்கள் மிஸ்ரா, தேவானந்த் மற்றும் நடுவர் ஹரிஹரன் உடன் செல்கின்றனர்.

News January 13, 2026

புதுவை: இனி சொத்து தகராறுக்கு Whatsapp-ல் தீர்வு!

image

புதுவை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!