News October 23, 2024

இறுதிப் போட்டிக்கு 3 பேர் தேர்வு

image

கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, இளம் பேச்சாளர்களை திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடத்தி வருகிறது. கடந்த ஆக.17ஆம் தேதி முதல் பேச்சுப்போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வருகிறது. இந்நிலையில் கடந்த அக்.13 அன்று நடைபெற்ற போட்டியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இறுதிப் போட்டிக்கு ச.பேரரசன், ச.யாசர்அரபாத், தா.ஜெயபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News September 18, 2025

காஞ்சிபுரத்தில் இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

காஞ்சிபுரம்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான அறிவிப்பானது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 22.09.2025 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

error: Content is protected !!