News October 23, 2024
ஹிஸ்புல்லா அமைப்புக்கு அதிர்ச்சி அளித்த இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹாஷிம் சஃபிதீனை இஸ்ரேல் படைகள் கொன்றதாக IDF அறிவித்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு லெபனானின் தஹியாவில் உள்ள பதுங்கு குழி மீது நடத்தியத் தாக்குதலில் அந்த அமைப்பின் புலனாய்வுப்பிரிவு தலைவர் அலிஹுசைன் & முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதில் சஃபிதீனும் உயிரிழந்ததால் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News November 6, 2025
பிஹார் தேர்தல்: மோடி, ராகுல் வேண்டுகோள்

பிஹாரில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிஹார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்முறை வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்று ராகுல் காந்தி வாக்குத் திருட்டை முறியடித்து, விழிப்புடன் செயல்பட்டு பிஹாரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
News November 6, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1000.. வெளியான புதிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் காத்திருக்கின்றனர். இதில், எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், குறைந்தது 3 லட்சம் பெண்களுக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News November 6, 2025
தொடரும் அநீதி.. BCCI-யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

SA அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், நெட்டிசன்கள் BCCI-யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரஞ்சி தொடரில் 3 ஆட்டங்களில் ஷமி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் அடங்கும். உடல் தகுதி & பார்மை நிரூபித்த பிறகும், ஏன் ஷமியை தேர்ந்தெடுக்கவில்லை என்ற விமர்சனம் சோஷியல் மீடியாவில் அதிகரித்துள்ளது. ஷமிக்கு வாய்ப்பு அளித்திருக்கணுமா?


