News October 23, 2024
ALERT: புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் SEBI

பரஸ்பர நிதி நிறுவனங்களின் நடைமுறை வெளிப்படைத்தன்மையை SEBI புதிய விதிகளை நவ. 1 முதல் அமல்படுத்தவுள்ளது. அதன்படி, இனிமேல், எந்தவொரு AMC நிறுவனத்தின் முக்கிய பணியாளர்கள், அந்தந்த நிறுவனங்களின் MF யூனிட்களில் ஒரு காலாண்டில் ₹15 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், 2 நாட்களுக்குள் இணக்க அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். வாங்கிய யூனிட்களை ஒரு மாதத்திற்குள் (காரணம் தெரிவிக்காமல்) விற்கக்கூடாது.
Similar News
News December 25, 2025
இடியாப்பத்திற்கு வந்த இடியாப்ப சிக்கல்!

சைக்கிள் மற்றும் பைக்கில் இடியாப்பம் விற்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இடியாப்பத்தை முறையாக தயாரிக்காமல் விற்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
News December 25, 2025
உலகப்போரை நிறுத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா!

1914-ல் முதல் உலகப்போரில் ஜெர்மன்-பிரிட்டிஷ் வீரர்கள் கடுமையாக போரிட்டு கொண்டிருந்த சமயம். டிச., 24-ம் தேதி இரவு, ஜெர்மன் பகுதியில் துப்பாக்கி சத்தத்திற்கு பதிலாக, இனிய கிறிஸ்துமஸ் கீதம் ஒலித்தது. மறுநாள் களத்தில் இருந்த இருநாட்டு வீரர்களும் உணவுகளை பரிமாறி ஃபுட்பால் விளையாடினர். தளபதிகளின் உத்தரவு இல்லாமல் நிகழ்ந்த இந்த ஒருநாள் போர் நிறுத்தம், மனிதநேயத்தின் சாட்சியாக வரலாற்றில் நீடிக்கிறது.
News December 25, 2025
அஜிதா ஹாஸ்பிடலில் அனுமதி.. விஜய் கடும் அப்செட்!

தூத்துக்குடி தவெக <<18649222>>நிர்வாகி அஜிதா ஆக்னல்<<>> உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்படாததால் நேற்று முன்தினம் தவெக ஆபிஸ் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதோடு விஜய்யின் காரை வழிமறித்தார். பதவி கிடைக்காத அதிருப்தியில் 2 நாள்களாக சாப்பிடாமல் இருந்த அஜிதா, உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், விஜய் கடும் அப்செட் ஆகியுள்ளாராம்.


