News October 23, 2024
தம்பதிகளை நேரில் ஆஜராக நிர்பந்திக்காதீர்!

விவாகரத்து வழக்குகளில் தம்பதியினரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழக தம்பதி விவாகரத்துக் கோரிய வழக்கில், நேரில் ஆஜராகவில்லை என்பதால் குடும்பநல நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், விவாகரத்து வழக்குகளில் காணொளி காட்சியில் ஆஜராக வாய்ப்பளிக்குமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 30, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்துள்ளது. இன்று மதிய நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹350 குறைந்து ₹15,850-க்கும், சவரனுக்கு ₹2,800 குறைந்து ₹1,26,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 30, 2026
நான் கொச்சைப்படுத்தவில்லை: மா.சு விளக்கம்

தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் கோரி போராடுவது ‘பேஷன்’ ஆகிவிட்டது என அமைச்சர் மா.சு., கூறியதற்கு <<19000579>>அண்ணாமலை <<>>கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டங்களை ஒருபோதும் கொச்சைப்படுத்தவில்லை என மா.சு விளக்கமளித்துள்ளார். போராட்டம் என்பது இயல்பாக நடக்க வேண்டும்; சிலர் தூண்டுதலால் நடக்க கூடாது; தேர்தல் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
தைப்பூசம் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி மக்கள் ஊர்களுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் உடனே டிக்கெட்களை முன்பதிவு செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள்! SHARE IT.


