News October 23, 2024
SMS அனுப்பி EPF பேலன்ஸ் அறியலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் பணம் குறித்தத் தகவலை SMS அனுப்பி தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. அது எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம். EPF கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், உங்கள் EPF கணக்கில் தற்போது எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்ற தகவல், SMSஆக உங்கள் எண்ணுக்கு வரும்.
Similar News
News July 7, 2025
தொண்டர்கள் வெள்ளத்தில் இபிஎஸ் ரோடு ஷோ

மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்.. என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். சுற்றுப்பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News July 7, 2025
26/11 தாக்குதல்: பாக்., தொடர்பு உறுதியானது

26/11 தாக்குதலில் பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தாக்குதலின் போது, தான் அங்கு இருந்ததையும், இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பாக்.,க்கு நீண்டகாலமாக தொடர்பிருப்பதையும், குறிப்பாக, 26/11 தாக்குதலில் பாக். தொடர்பையும் அவர் உறுதிச் செய்துள்ளார். இந்த விசாரணைக்காக அமெரிக்கா அண்மையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
News July 7, 2025
வார விடுமுறை… சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முதல் ஆசை மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜூலை 11 – ஆக. 17 வரை வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஜூலை 12 – ஆக. 18 வரை சனி, திங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டூர் போக ரெடியா..!