News March 18, 2024
கோவை அருகே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மிரட்டல் விடுத்த மர்மநபர் போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, பள்ளியில் போலீசார் குவிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று மாலை கோவையில் “ரோடு ஷோ” நடத்த உள்ள நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (02.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
காரமடை அருகே விபத்து: 4 பேர் காயம்

காரமடை அருகே உள்ள புகழ்பெற்ற குருந்தமலை கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதை காண இரண்டு இருசக்கர வாகனங்களில் தலா இருவர் என மொத்தம் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். கிட்டம்பாளையம் அருகே சென்றபோது, இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 2, 2026
கோவை: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.


