News October 23, 2024

ஆத்தூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை

image

ஆத்தூர் அருகே கல்பகனூர் மொரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞரை அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வெட்டிக்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இறந்தவர் உடலை மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 27, 2025

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அரிய வேலைவாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூகப்பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10.09.2025க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, நான்காவது தளம் மாவட்ட ஆட்சியரகத்தில் விண்ணபிக்கலாம் அல்லது 0427 2416966 என்ற என்னுக்கு அழைக்கலாம் என கலெக்டர் பிருந்த தேவி அறிவிப்பு!(SHARE பண்ணுங்க)

News August 27, 2025

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை!

image

சேலம், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள148 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு. (SHARE பண்ணுங்க)

News August 27, 2025

பழங்குடி இன இளைஞர்களுக்கான வாய்ப்பு!

image

சேலம் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வீடியோ ஒளிப்பதிவு மற்றும் ஆடியோ வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரை உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பங்களை விண்ணப்பித்து பயனடையுமாறு, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!