News October 23, 2024
பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்!

கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்தி, வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேரணியாக சென்ற அவர், வேட்பு மனுவில் கையெழுத்திட்டு தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தார். வயநாடு தொகுதிக்கு நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
Similar News
News February 8, 2026
362 பாகிஸ்தான் வீரர்களை காலி செய்த BLA

கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. 14 நகரங்களில் 76 தாக்குதலை நடத்தியதாக கூறும் BLA, 364 ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தங்கள் தரப்பில் 93 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதிலும் தற்கொலைப்படை தாக்குதலில் மட்டும் 50 பேர் உயிரை பறிகொடுத்ததாகவும் கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவமும், அரசும் நிலைகுலைந்து நிற்கின்றன.
News February 8, 2026
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைகிறது!

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருவதாலும், போர் பதற்றம் மெல்ல மெல்ல குறைவதாலும் 1 சவரன் தங்கத்தின் விலை ₹70,000 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக நிகழாது என்றும் படிப்படியாக தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். உஷார் மக்களே!
News February 8, 2026
மாரடைப்பு வரும்.. இதெல்லாம் செய்யாதீங்க!

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல்நல பாதிப்பு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவை தவறு. தினசரி நாம் கடைப்பிடிக்கும் ஒரு சில பழக்கங்கள், நாளடைவில் மாரடைப்பை உண்டாக்குகின்றன. அவை என்னென்ன பழக்கங்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா உடனே மாத்திக்கோங்க. ஹெல்தியா இருங்க!


