News October 23, 2024
ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை

புதுவை ரயில்வே போலீசார் நேற்று கூறியதாவது,ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்றவற்றை கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணிகள் இந்தத் தடையை மீறி பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதனால் மற்ற பயணிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தடையை மீறி பட்டாசுகள் கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News September 14, 2025
புதுவை மக்களே.. வங்கியில் வேலை வாய்ப்பு!

புதுவை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
News September 14, 2025
புதுவை: போக்சோ வழக்கில் முதியவர் கைது

புதுவை, மேட்டுப்பாளையத்தில் 11 வயது சிறுமி நேற்று முன்தினம் டியூஷனில் படித்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதியவர் ஒருவர், சிறுமியை அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, அந்நபர் அதேபகுதியை சேர்ந்த புஷ்பநாதன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News September 14, 2025
புதுவை: டிரைவர்களுக்கு போக்குவரத்து எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார்- ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போக்குவரத்து சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது, ஆட்டோக்களுக்கான உரிய ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார்.