News October 23, 2024
கிருஷ்ணகிரி சீர்மரபினருக்கு ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மருத்துவம், ஓய்வூதியம், திருமணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் நடத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
கிருஷ்ணகிரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்!

கிருஷ்ணகிரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
விதை விற்பனையில் மோசடி! 22 நிறுவனங்கள் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதை ஆய்வு துணை இயக்குநர் நாகராஜன் நேற்று (பிப்.3) ஆய்வு மேற்கொண்டார். இதில் விதிகளை மீறிய 22 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ₹97.3 லட்சம் மதிப்பிலான 312 மெட்ரிக் டன் விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ரசீது இன்றி விதை விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
News February 4, 2026
கிருஷ்ணகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE IT!


