News October 23, 2024
50 பைசா திருப்பி கேட்டவருக்கு ₹15,000 இழப்பீடு!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மானசா என்பவருக்கு ₹15,000 இழப்பீடு வழங்க தபால் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மானசா பதிவுத் தபால் ஒன்றை அனுப்பிய போது ₹29.50க்கு பில் வந்ததாகவும், ஆனால் ஊழியர்கள் தன்னிடம் ₹30 வசூலித்ததாகவும் வழக்குத் தொடுத்தார். மென்பொருள் கோளாறு காரணமாக அதிக கட்டணம் வசூலித்ததை தபால் துறை ஒப்புக்கொண்டதால் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
Similar News
News February 2, 2026
தேர்தல் ரிசல்ட் பாஜகவுக்கு தெரியும்: ஜோதிமணி MP

மத்திய பட்ஜெட் முற்றிலும் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக ஜோதிமணி MP கூறியுள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்து தான் தமிழகத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் TN எதிர்பார்த்த மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News February 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டில் இதற்கு ₹10,000 கோடி

இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்த ‘பயோ ஃபார்மா சக்தி’ திட்டத்தை FM நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், விலை உயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதுடன், அவை பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.


