News March 18, 2024
திருச்சியில் அதிகாரிகளிடம் சிக்கிய பணம்.!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று(மார்ச்.18) காலை திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 6, 2025
திருச்சி: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

திருச்சி, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
திருச்சி: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <
News September 6, 2025
காங்கிரஸ் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அழைப்பு

நாளை செப்.7-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் ஆணையம், பி.ஜே.பி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு திருச்சி மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாநில தலைவரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.