News March 18, 2024
கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 9.25 முதல் 11.40 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் 6 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 4, 2025
திருவள்ளூர் போலிஸ் அடுத்தால் என்ன செய்யலாம் ? 2/2

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.
News July 4, 2025
திருவள்ளூர் போலிஸ் அடுத்தால் என்ன செய்யலாம் ? 1/2

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த லிங்க் மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (044-27666555) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து <<16937806>>தெரியப்படுத்துங்கள் <<>>
News July 4, 2025
அமெரிக்காவில் திருவள்ளூர் எம் பி

திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சசிகந்த் செந்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சார்பில், வட கரோலினா மாநிலம், ராலீ நகரத்தில் நடைபெறும் 38-ஆவது தமிழ் விழாவில் பங்கேற்க உள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழ் குடிகள், இளைஞர், தமிழர்கள் ஒருங்கிணைப்பு தமிழ் வளர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.